மதுரை – தேனி முன்பதில்லாத விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து காலை 08:05 மணிக்கு புறப்பட்டு 09.35 மணிக்கு தேனியை வந்தடைகிறது.
தேனி – மதுரை முன்பதில்லாத விரைவு ரயில் எண் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு 07.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது.
வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் போடி-சென்னை எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20602) செவ்வாய், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படுகிறது.
சென்னையில் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடி வரையில் மறு மார்க்கத்தில் (வண்டி எண் 20601) ரயில், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.
ரயில் நிலைய தொலைபேசி எண் : 04546 252319
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் தொலைபேசி எண் : 04546 252666
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் தேனிக்கு உள்ளது.
தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள குமுளி, மூணாறு முதலிய கேரள மாநில நகரங்களுக்கு பேருந்து சேவைகள் உள்ளது.