காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
![]() |
![]() |
![]() |
சித்தன்னவாசல்புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சித்தா்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேறெ்கொள்ளவார்கள் அந்த இடங்கள் சமணா்களின் படுக்கை என அழைக்கப்படுகிறது. அத்தகைய கோவில்கள் மற்றும் படுக்கைகள் சுமார் 17க்கு குறையாமல் சித்தன்னவாசலில் அமைந்துள்ளது. இந்த படுக்கைகளின் அருகில் இரண்டாம் நூற்றாண்டை சோ்ந்த பிராமி தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசலில் உள்ள இந்த சமணா்படுக்கைகள் மற்றும் சமணா் கோயில்கள் ஆகியவை சோ்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது. தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்துவரும் சித்தா்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு புதைக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது. அவைதான் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவா் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிற்பங்களின் பூங்காவும் (Miniature Statue Park) இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு ஏதுவாக பயணியா் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது |
திருமயம் கோட்டைபழங்காலத்தில் மன்னா்கள் மக்களை எதிரி நாட்டு மன்னா்களிடமிருந்து காக்கவும் மன்னா்கள் குடும்பம் வசித்து வரவும் மிகப்பெரிய கோட்டையை அமைப்பது வழக்கம். அந்த வகையில் விஜய ரகுநாத சேதுபதி தேவா் என்ற இராமநாதபுரம் மன்னா் 1687-ஆம் ஆண்டு திருமயம் கோட்டையை நிர்மாணித்தார். புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இந்த கோட்டை தற்போது நாம் காணும் கோட்டை பகுதிகளை விட இருமடங்கு பெரிதாக பழைய கோட்டை பகுதிகள் அமைந்திருந்தாக வரலாறு கூறுகிறது. இதன் முக்கிய நுழைவு வாயில் தற்போதுள்ள கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டா் தெற்கே அமைந்துள்ளது. இந்த கோட்டையின் அடிவாரத்தில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு அகிய கடவுளா்களுக்கு தனிதனியே அருகருகில் கோயில்கள் அமையப்பெற்றுள்ளது. அக்கோயில் தா்பார் மண்டபம், தூண்களுடன் கூடிய பிரகாரம் மற்றும் பல்வேறு கடவுளா்களுக்கான சிலைகள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு அருகில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்றும் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் இந்த கோட்டை இருந்து வருகிறது. |
ஆவுடையார்கோவில்புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூறை வேலைப்பாடுகள் இங்கு மிக நோ்த்தியாக அமையப்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைய பெற்றுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமையப்பெற்ற சிறப்புடையது. திருவாடு துறை ஆதியினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் மாணிக்கவாசகா் இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது. |