நகரத்தை அடைவது எப்படி
அரக்கோணம் நகரம் தமிழ்நாட்டில் பிரபலமான நடுத்தர நகரமாக திகழ்கிறது. அரக்கோணம் நகரமானது வேலுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 69 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் இரயில்வே துறையில் மிக முக்கிய பங்காக திகழ்கிறது. மூன்றாவது பெரிய இரயில்வே சந்திப்பாகவும், வேலுர் மாவட்டத்தில் உள்ளது, மேலும் அனைத்து இரயில்களும் இங்கு நின்று செல்கிறது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய இரயில்வே பணிமனை (EWS) மற்றும் எலக்ட்ரிக் லோகோ ஷெட் (ELS) போன்றவையும் அமைய பெற்றுள்ளது. அரக்கோணம் இரயில்வே சந்திப்பு மிகப் பிரபலமான சந்திப்பாகவும், மிகப்பழமையான இரயில்வே சந்திப்பாகவும் திகழ்ந்து , மிக பெரிய நகரங்களான மும்பை, கோவா, விஜயவாடா, பெங்களூர், ஹைதரபார், கோயம்புத்தூர். திருப்பதி (ம) மங்களூர் போன்றவைகளை இணைக்கிறது.
விமானத்தில்
அரக்கோணத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்ய 69 கி.மீ தொலையில் விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளலாம்.
இரயில்மார்கமாக
அனைத்து பெரிய நகரங்களுக்கும் அரக்கோணம் இரயில்வே சந்திப்பிலிருந்து உடனுக்குடன் இரயில் போக்குவரத்து உள்ளது
தரைவழி
அனைத்து முக்கியமான நகரங்களுக்கும் உடனுக்குடன் பேருந்து வசதிகள் அமையப்பெற்றுள்ளது.