குடிநீர் விநியோகம்

ஆம்பூர் நகராட்சி

     ஆம்பூர் நகராட்சி 2008ம் ஆண்டு முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த்ப்ப்ட்டு செயல்பட்டு வருகிறது.  நகராட்சியின் மொத்தப் பரப்பளவு 17,97 சதுர மீட்டர் ஆகும்.  நகரின் மக்கள் தொகை 2011 வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 114608 ஆகும்.  நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.  தற்போது நகராட்சி பகுதியில் உள்ள சொத்துவரி இனங்கள் கேட்பு பட்டியலின்படி 19619 எண்கள் ஆகும்.

     இந்நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்களுக்கு தறபொதுள்ள நிலைப்படி நகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையங்கள் ஆழதுளை சிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளில் இருந்து சுமார் 1.80 MLD  கொள்ள்ளவு மற்றும் வேலுர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 9.00 MLD  குடிநீர் பெறப்பட்டு 90 LPCD வீதம் தற்போதுள்ள 28.00 CC கொள்ள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாரியாக விநியோகிக்ப்பட்டு வருகிறது.

     மேலும் இந்நகராட்சியில் அம்ருத் திட்டம் 2015-2016 ன் கீழ் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.50.47 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 52.50 இலட்சம் லிட்டர் கொள்ள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ள்ளவு கொண்ட தரை மட்ட நீர்தேக்க தொட்டிகளுடன் குடிநீர் விநியோக குழாய்கள் புதியதாக பொருத்தி தினசரி 135 லிட்டர் குடிநீர் விநியோகம் மேற்க்கொள்ள வழிவகை செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

     தற்போது இந்நகராட்சியில் உள்ள சொத்துவரி இனங்களில் உள்ள 19619 எண்ணிக்கை கொண்ட வீடுகளுக்கு அம்ருத் திட்டம் 2015-2016 -ன் கீழ்  13300 எண்ணிக்கை  இணைப்புகள் கொடுக்கப்ப்ட்டுள்ளது.

     நகராட்சியில் பொது மக்கள் தெரிவிக்கப்படும் குடிநீர் தொடர்பான புகார்கள் சரிசெய்ய பொறியியல் பிரிவில் பதிவேடு பராம்ரிக்கப்ப்ட்டு பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது மற்றும் ONLINE GRIVANCE முலம் பெறப்படும் புகார்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது.